
சான்பிரான்சிஸ்கோ:
அமெரிக்காவில் உள்ள யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம் அடைந்தனர்.
.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ளது சான் பருனோ என்ற பகுதி. இங்கு பிரபல சமூக வலைதளமான யுடியூப் தலைமை அலுவலகம் செயல்படுகிறது.
நேற்று இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் பேர் காயம் அடைந்ததனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு பெண். பிறகு அவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சான்பருனோ நகர காவல்துறையினர் விரைந்து பாதுகாப்பபணியில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சூடுக்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாக தற்போது வரை தெரியவில்லை என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]