டில்லி:

ர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரை நீதித்துறையில் நியமனம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக பிரபல வழக்கறிஞரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் குற்றம் சாட்டி உள்ளார்.

நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு இருப்பதாக உச்சநீதி மன்ற நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டி உள்ள நிலையில், கபில்சிபலின் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில்சிபல், ஏற்கனவே அனைத்து முக்கிய அரசு நிறுவனங்களிலும் இந்துத்துவாவை சேர்ந்தவர்களை நியமனம் செய்து, தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியவர், ஏர்இந்தியாவை விற்றுவிட்டது என்றும் கூறினார்.

மேலும், உச்சநீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளபடி,ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரை நீதித்துறையின்  உயர் பொறுப்பில் நியமிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த செயல் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி விடும்.

நீதித்துறை தனது கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாகக் கருதுவதால், நீதித்துறை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதே அவரது அரசாங்கத்தின் சிந்தனை “என்று அவர் கூறினார்.

பிரதம மந்திரி முதலில் பாராளுமன்ற அமைப்பு மற்றும் இப்போது ஊடகங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை பாழாக்கி விட்டார்.

இந்த அரசாங்கம் நீதித்துறைமீது தொடர்ச்சியாக தாக்கி வருகிறது … “என்று அவர் கூறினார்.