ஞ்சாவூர்

ரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை ஒட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.    கடந்த 20 ஆம் தேதி அவர் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.    அவரது இறுதிச் சடங்கை ஒட்டி சசிகலா 15 நாள் பரோலில் வெளிவந்துள்ளார்.   சசிகலா தற்போது தஞ்சை அருளாநந்த நகரில் தங்கி இருக்கிறார்.

நேற்று காலையில் இருந்தே சசிகலா சோர்வுடன் இருந்துள்ளார்.  பிறகு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  அதை ஒட்டி அவரை யாரும் சந்திக்க வேண்டாம் என தினகரன் தெரிவித்துள்ளார்.   நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.    மருத்துவர்கள் சசிகலா நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.