ஐதராபாத்:

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெலுங்குதேசம்&பாஜக கூட்டணி முறிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ராஜினாமா செய்ய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]