மு.க.ஸ்டாலின்

 

சென்னை:

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பழமொழிகளை மாற்றிப் பேசுவது சமூகவலைகளங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டு வரும் நிலையில், தி.மு.க.வினர் பழமொழிகளாலேயே பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தி.மு.க. செயல்தலைவர் மேடைப்பேச்சுக்களில் தடுமாறுவது தொடர்கிறது. சுதந்திரப்போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்தது திருப்பூரில் என்று தவறாக ஸ்டாலின் பேசினார். திருப்பூர் குமரன் பிறந்தது, ஈரோடு மாவட்டம் சென்னி மலையில்.

இது போல மேடைப்பேச்சுக்கள் பலவற்றில் ஸ்டாலின் தடுமாறியது சமூகவலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில், “யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே” என்று ஸ்டாலின் பேசியது அகில இந்திய அளவில் சமூகவலைதளங்களில் டிரண்ட் ஆனது. நேற்று ஈரோடு மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின், “பூனை மேல் மதில் போல” என்று மீண்டும் ஒரு பழமொழியை மாற்றிப்பேசினார். இதுவும் நெட்டிசன்களால் பலமாக கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பழமொழியை வைத்து தங்கள் செயல் தலைவர் கிண்டலடிக்கப்படுவதற்கு பழமொழியாலேயே பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

தி.மு.க. பிரமுகர் ஆரோக்ய எட்வின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

2G அவிழும் உண்மைகள் புத்தக வெளியீட்டு விழாவிலும் சரி, இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுகவின் ஈரோடு மண்டல மாநாட்டிலும் சரி…… எத்தனையோ தலைவர்கள், எவ்வளவோ கருத்துக்களைப் பேசினர். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஸ்டாலின் பழமொழியை மாற்றிச் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள் சில மேதாவிகள்…..

“ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்….” என்ற பழமொழி போல  சிலர் இருப்பார்கள்..  ” என்று ஆரோக்ய எட்வின் பதிவிட்டுள்ளார்.

இது போல தி.மு.க.வினர் பலரும் பழமொழிகளை வைத்தே கிண்டலடிப்போருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

 

[youtube-feed feed=1]