சென்னை

சென்னை புறநகர் ரெயில் சேவை வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கு மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் ரெயில்வே பாதையான சென்னை கடற்கரை – வண்ணாரப்பேட்டை தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.  அதையொட்டி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை இரவு 9.40 மணிக்கு இயங்க உள்ள கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை ரெயில் செண்டிரல் மூர்மார்க்கெட் வளாகத்துக்கு திருப்பி விடப்படுகிறது.  இந்த ரெயில் சென்னை கடற்கரைக்கு செல்லாது.    அத்துடன் சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் அதிகால 1.20 மணி ரெயில் செண்டிரல்  மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து கிளம்பும்.   அன்று கடறகரையில் இருந்து இந்த ரெயில் இயங்காது.