ராஞ்சி:

பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும், லாலு குற்றவாளி என்று  ராஞ்சி கோர்ட்டு கடந்த 19ந்தேதி தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று தீர்ப்பு விவரம் கூறப்பட்டது.

இந்த வழக்கில் லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது ராஞ்சி நீதிமன்றம்.

ஏற்கனவே 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4வது வழக்கிலும் லாலு உள்பட உள்பட 19பேரை குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கில் 12பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 4வது வழக்கில், அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி லாலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பீகார் முதல்வராக 1995-96 ம் ஆண்டுகளில் லாலுபிரசாத்  இருந்த போது தும்ஹா கரூவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில்,   லுாலு, ஜெகந்நாத் மிஸ்ரா உள்பட  30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நாட்டை உலுக்கிய இந்த  மாட்டு தீவன ஊழல் வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்கில் லாலுவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  4- வது வழக்கிலும் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் லாலு, இன்று 4வது வழக்கில் தீர்ப்பு விவரம் வழங்கப்படுவதை யொட்டி  நீதிமன்றம் அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

[youtube-feed feed=1]