
கோவை:
நடக்க முடியாத முதியவரை, திண்டுக்கல்லில் இருந்து அழைத்து வந்து கோவை பகுதியில் உள்ள சாலையில் இறக்கி விட்டுச்சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது.
விசாரணையில், திருண்டுக்கல் பகுதியில் உள்ள அன்னை கிறிஸ்தவ சமூக சேவை நிறுவனம் இந்த மனிதாபி மானமற்ற செயலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடக்க முடியாத முதியவர் ஒருவர் சாரையோரம் இருந்த நிலையில் சாலையில் வருவோர் போவோரிடம் உதவி கேட்டுள்ளார்.
இதையறிந்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணையில், அவரை திண்டுக்கல் பகுதியில் அன்னை ஆசிரமம் என்ற பெயரில் முதியவர்களுக்கான தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆசிரமத்தை சேர்ந்தவர்கள், முதியவரை அங்கிருந்து அழைத்து வந்து கோவை சிங்காநல்லூர் பகுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், ஆசிரமத்தில் முறைகேடுகள் நடைபெறுவதால், தான் ஆசிரமத்தில் இருந்து வெளியே செல்வதாக கூறியதால், தன்னை தாக்கிய ஆசிரமத்தை சேர்ந்தவர்கள், தன்னை இங்கே ரோட்டில் போட்டுவிட்டு சென்றனர், மேலும் 4 பேரை வரும் வழியில் திருப்பூர் அருகே சாலையில் இறக்கிவிட்டதாகவும் கூறி உள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் இந்த அன்னை ஆசிரமம், சர்ச்சைக்குள்ளான காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தின் கிளை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]