டில்லி:

பணியின் போது இறக்கும், மாயமாகும், ஊனமாகும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கு ரூ.10 ஆயிரம் என வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘‘கல்வி உதவித் தொகை என்பது மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்படும். இது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ராணுவம், சானிக் பள்ளிகள், மற்றும் மத்திய மாநில அரசுகளின் அங்கிகாரம் பெற்ற இதர பள்ளிகள், கல்லூரிகள், தன்னாட்சி கல்வி நிறுவனங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பொருந்தும்.

ராணுவ படைப் பிரிவில் அதிகாரிகள் முதல் அதிகாரிகளுக்கு கீழ் பணியாற்றும் வீரர்கள் பணி செயல்பாட்டின் போது இறந்தாலோ அல்லது மாயமானாலோ அல்லது ஊனமடைந்தாலோ இந்த நிதியுதவி வழங்கப்படும்.

முன்னதாக கல்வி உதவித் தொகை வரம்பை தளர்த்த வலியுறுத்தி இந்திய கடற்படை தளபதி அனில் லான்பா ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிபபிடத்தக்கது.

[youtube-feed feed=1]