
டில்லி:
வெளிநாட்டு நிதி ஆதாரத்தில் இயங்கி வந்த 5ஆயிரம் என்ஜிஓக்களின் லைசென்ஸ் ரத்த் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின், ரத்து செய்யப்பட்டுள்ள என்ஜிஓக்கள் எத்தனை என்ற கேள்விக்கு மத்திய உள்துணை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.
அப்போது, இந்தியாவில் இயங்கி வந்த சுமார் 5 ஆயிரம் அரசு சாரா அமைப்புக்களின் (என்.ஜி.ஓ) லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து அவர்கள் பெரும் நன்கொடை வாங்குவது தடுத்து நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு 14 மே 2017 மற்றும் ஜூன் 15, 2017 ஆகிய தேதிகளுக்கு இடையே நிலுவையிலுள்ள வருடாந்த வருமானங்களை பதிவேற்றுவதற்கு ஒரு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர், கடந்த ஐந்து நிதியாண்டில், பெமா ( FEMA) சட்டத்தின் கீழ் 2,745 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]