டில்லி:

பாஜக அரசின் மறைமுக உத்தரவு காரணமாக அவையை அதிமுக முடக்கி வருவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தொடர்ந்து11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மோடி தலைமையிலான  மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்த தீர்மானம் குறித்து விவாதிக்க முடியாமல் அவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இதற்கு தெலுங்கு தேசம், சமாஜ்வாதி உள்பட எதிர்க்கட்சிகள் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளன.

இந்நிலையில், பாஜக அரசு மீது  நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்பதற்காகவே அதிமுக அவையை முடக்கி வருகிறது என்று  சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் அதிமுக மீது குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அவையை முடக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.