டில்லி:

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் கணக்கை பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இந்திய அரசியல் மற்றும் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது டுவிட்டர் பதிவில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் கணக்கின் பெயரை மாற்றம் செய்துள்ளார்.

OfficeOf RG என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் சமூக தளத்தில் இயங்கி வந்த அவரது டுவிட்டர் கணக்கில்  தற்போது, சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது.

அதில் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ கணக்கு,பாராளுமன்ற உறுப்பினர்,  தலைவர், இந்தியன் நேஷ்னல் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.