டில்லி:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அவர்களி பணி ஓய்வின்போது பணிக்கொடையான கிராஜூவிட்டி வழங்கப்படுவது வழக்கம்.
இந்த பணத்திற்கு பிடிக்கப்படும் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்த மசோதா குரல் ஓட்டு மூலம் நிறைவேறி உள்ளது.
பணிக்கொடை சட்டம் 1972’-ன்படி தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.10 லட்சமாக இருந்தது. முறைசார் துறைகளில் 5 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் பணியாற்றி விட்டு விலகினாலோ அல்லது பணி ஓய்வின் போதோ ரூ.10 லட்சம் வரை வரியில்லா பணிக்கொடை பெற முடியும்.
இதை 20லட்சமாக உயர்த்தக்கோரி தொழிலாளர்கள் சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து பணிக்கொடை உச்சவரம்பை 20 லட்சமாக உயர்த்தி சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றியதை தொடர்ந்து தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சம் ஆகிறது
இதன் காரணமாக முறைசார் தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு வரியில்லாமல் ரூ.20 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது