
மதுரை:
குரங்கனி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு 9 பேர் பலியானதும், தீக்காயம் பட்டோர் மதுரை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிந்த விசயம்.
அவர்களை சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்றதும் தெரியும். அங்கு மருத்துவமனையில் அவர்களுக்காக புதிதாக பச்சை நிற கார்பெட் வாங்கி விரித்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
காட்டுத்தீயால் பலர் பலியாகி, மீதமுள்ளோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த பச்சை கார்பெட் வரவேற்பு தேவையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
[youtube-feed feed=1]