சென்னை:

லக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் திருநங்கையாக மாறிய மணமகளுக்கும், திருநம்பியாக மாறிய மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர், பாலின மாறுதல் காரணமாக, பாண்டிச்சேரியை சேர்ந்த திருநங்கையுடன் புனேக்கு சென்று தங்கி, திருநங்கையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இவர் தொலைதூரக்கல்வி மூலம் 10, 12ம் வகுப்புகளை முடித்துள்ள நிலையில், மேடை நாடகக் கலைஞராகவும் நடிப்புப் பயிற்றுநராகவும் உள்ளார்.

இவர் சென்னை திரும்பியதும்,  மேடை நாடகங்களில் நடித்தபோது, தன்னுடன் பணியாற்றிய மணிக்குட்டி மற்றும் ஜெயராமன் உதவியுடன் தனது மேடை நாடகத்தை மேலும் மெருகேற்றியதாக கூறும் பிரித்திஷா, தற்போது முழுநேர நடிப்புப் பயிற்சி வழங்கி வருவதாக கூறுகிறார்.

இவருக்கும், ஈரோட்டை சேர்ந்த  பிரேம் குமரன் என்ற திருநம்பியுடன் ஏற்பட்ட முகநூல் நட்பின்போது,  தான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆண் போலவே தனது உணர்ச்சிகள் இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அப்போது, பிரத்திஷா தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை சந்தித்தாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நண்பர்களாக பழகிய இருவரும், பின்னர் காதலர்களாக மாறியதாகவும், ஆனால், தங்களது பாலினத்தை குறிப்பிட்டு, தாங்கள் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருவரும் பேசி, “நாம் விரும்பும் நபர்களால் புறக்கணிக்கப்படும் நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது?”  என நினைத்து,  நாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும், இது குறித்து குடும்பத்தினரில் தெரிவித்தால், எதிர்ப்புதான் கிளம்பும் என்பதால்,  என்று,  தங்கள் நலம் விரும்பியான வழக்கறிஞர் சுஜாதா மூலம் திருமணம் செய்ய முடிவு செய்தாக கூறினார்.

அவரின் அறிவுறுத்தலின்படி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தை அணுகி,  மகளிர் தினமான கடந்த 8ந்தேதி,  தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் முத்தையன் , பெரியார் ஐஏஎஸ் அகாடமி பொறுப்பாளர் அமுதரசன் தலைமையில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் செந்தில் குமாரி ஆகியோர் தலைமையில் தங்களது திருமணம் நடைபெற்றதாகவும் கூறி உள்ளார்.

மூன்றாம் பாலினத்தவர்களான திருநம்பி, திருநங்கை திருமணம் மகளிர் தினத்தன்று நடைபெற்றிருப்பது நாட்டின் சமூக மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு என்று கூறப்படுகிறது.