சேலம்:

லையேற்ற பயிற்சிக்கு உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்தே னி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதில் மலையேற்ற பயிற்சிக்கு , சென்னையை சேர்ந்த டிரெக்கிங் கிளப் சார்பில்,  சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர்.

இவர்கள் தங்களது பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 9 பேர் பலியான நிலையில் பலர் தீக்காயத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற் கொண்டு வருகின்றனர்.

இவர்களில் 6 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்த நிகழ்வு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,

மலையேற்ற பயிற்சிக்கு உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்றும், மலையேற்ற பயிற்சி பெறுபவர்கள் அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களாகவே மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மலையேற்ற பயிற்சி பெறுபவர்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டும். உரிய அனுமதி பெற்றி ருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்க முடியும். ஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி, அவர்களாகவே மலையேறியதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை இனி வரும் காலங்களில் ஏற்படக் கூடாது என்றும், அரசு அனுமதியின்றி பயிற்சியில் ஈடுபட்டால் அவர்கள்மீது கடும் நடவடிககை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும்,  இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது நம் கடமை என்ற அவர்,  அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தீயணைப்பு துறை, வனத்துறை உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறினார்.

[youtube-feed feed=1]