டில்லி:

தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பணக்கார கட்சி எது என்பது குறித்து டில்லியை சேர்ந்த தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது.

இதில் உ.பி. மாநில சமாஜ்வாடி கட்சி முதலிடத்தில் உள்ளது. 2011-12ம் ஆண்டில் ரூ.212.86 கோடி சொத்துக்கள் இருந்தது. 2015-16ம் ஆண்டில் சொத்து மதிப்பு ரூ.635 கோடியாக உயர்ந்துள்ளது. இது 198 சதவீத வளர்ச்சியாகும்.

தமிழகத்தில் எதிர்கட்சியான தி.மு.க. ரூ. 257.18 கோடி சொத்துக்களுடன் 2வது இடத்தையும், அ.தி.மு.க. ரூ.224.87 கோடி சொத்துக்களுடன் 3வது இடத்திலும் உள்ளன. அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு 2011-12ம் ஆண்டில் ரூ.88.21 கோடியாக இருந்தது.     2015-16ல் ரூ.224.87 கோடியாக உயர்ந்தது. சொத்துமதிப்பு 155 சதவீதம் அதிகரித்துள்ளது.