டில்லி:

4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து நடைபெறும் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் 6 அணு உலைகள் இந்தியாவில் நிறுவ ஒப்பந்தம் போடப்படும் என  தகவல் வெளியாகி உள்ளது.

இன்று பிரான்ஸ் அதிபர் மற்றும் இந்திய பிரதமர்  மோடி இடையே இந்தியாவுக்கும், பிரான்சுக்கும்  இடையே  இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு பொருளாதாரம், பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும் என்றும், ஜெய்தாபூர் அணு மின்நிலையம் குறித்தும் ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியப் பெருங்கடலில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியாவுக்கு 36 ரஃபேல் ஜெட் போர் விமானங்களை விற்கும் உடன்படிக்கை இன்றைய பேச்சு வார்த்தையின்போது இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் மின்சார தேவையை கருத்தில்கொண்டு, பிரான்ஸ் 6 அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.