டில்லி:

ருவர்  முன்பதிவு செய்த ரெயில் டிக்கட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என புதிய அறிவிப்பை ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது.

ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் எதிர்பாராத விதமாக செல்ல முடியாத நிலை ஏற்படும்போது, அந்த டிக்கெட்டை வேறு ஒருவர் பெயருக்கு நிபந்தனைகளின் பேரில் மாற்றம் செய்துகொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒருவர்  முன்பதிவு செய்த ரெயில் டிக்கட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளும் திட்டத்தின்படி, அதை மாற்றித் தரும் அதிகாரம்  முன்பதிவு கண்காணிப்பாளர்களுக்கு  அளிக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளது.

மேலும், இவ்வாறு பெயர் மாற்றுவதற்காக, பல வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மாற்றம் செய்பவர்,  அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

முன்பதிவு செய்த ஒருவர், தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு டிக்கட்டை மாற்றிக் கொள்ள விரும்பி னால், ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக அதுகுறித்து கோரிக்கை விடுக்க வேண்டும்.

மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம்.

திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குழுவாக செல்பவர்களும், தேசிய மாணவர் படையினரும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.