டில்லி:

ரபேல் விமானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கியிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு ரூ.12,632 கோடி இழப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் ரந்தீப் சுர்ஜிவ்லா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நாட்டு நலனுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் எதிராக மன்னிக்க முடியாத குற்றத்தை மத்திய பாஜக அரசு செய்துள்ளது. போலி முகத்திரை, சுய தோல்வி கருத்துக்கள், திட்டமிட்ட பொய்கள் மூலம் திசை திருப்பவும், ஏமாற்றும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது  ரபேல் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் விமான போக்குவரத்து நிறுவன ஆண்டறிக்கையை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.12,632 கோடி இழப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவுக்கு 2016ம் ஆண்டில் 7.5 பில்லியன் ஈரோ மதிப்பில் 36 ரபேல் விமானங்களை விற்பனை செய்துள்ளது. கத்தார் மற்றும் எகிப்துக்கு 7.9 பில்லியன் ஈரோ மதிப்பில் 48 விமானங்களை 2015ம் ஆண்டில் விற்பனை செய்துள்ளது.

அதாவது இந்தியாவுக்கு ஒரு விமானம் ரூ. 1,670.7 கோடிக்கும், கத்தார் மற்றும் எகிப்துக்கு ரூ. 1,319.8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு விமானம் ரூ.350 கோடி கூடுதலாக இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று குலாம் நபி ஆசாத், ரந்தீப் சுர்ஜிவாலா குயோர் குற்றம்சாடடி வருகின்றனர்.

மற்ற நாடுகளை விட இந்தியா குறைந்த விலையில் ரபேல் விமானங்களை வாங்கியதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதே நிறுவனம் கத்தார், எகிப்து நாடுகளுக்கு இந்தியாவுக்கு வழங்கி விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்துள்ளது என்பது ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதவ் மூலம் பிரதமரிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதல் விதிகளை மீறியுள்ளார். ரபேல் விமான ஒப்பந்த விபரங்களை பகிரங்கமாக வெளியட வேண்டும் ªன்று எதிரகட்சிகளின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். நாடாளுமன்றத்துக்கும், நாட்டிற்கும்  உண்மையை  தெரிவிக்காமல் மத்திய அரசு மறைத்து வருகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.