கொல்கத்தா:
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மானு சிங்விக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க ராஜ்யசபா எம்.பி.க்கள் 5 பேரில் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்த பதவிளுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்தது.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் மானு சிங்வி, கபில் சிபல் ஆகியோர் எங்களது வழக்குகளை நீதிமன்றங்களை எதிர்கொள்கின்றனர். இதில் சிங்விக்கு ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி கோரிகை வந்தது.
இதையடுத்து ராஜ்யசபா மேற்கு வங்க மாநிலத்தின் 5வது உறுப்பினர் பதவிக்கு சிங்விக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
திரிணமுல் காங்கிரஸ் சார்பில் நதிமுல் ஹக், சுபாசிஷ்ல சக்ரபோர்தில சாந்துனு சென் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சிங்வியை வேட்பாளராக காங்கிரஸ் விரைவில் அறிவிக்கவுள்ளது.
[youtube-feed feed=1]