சென்னை:
ஹெல்மெட் சோதனையில், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் பலியான கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்துக்குக் காரணமான துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பபட்டு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், நேற்று இரவு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது பேருந்து மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக 23 பேர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை மறித்த டிராஃபிக் இன்ஸ்பெக்டரை கடந்து வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றதால், அவரின் காலரைப் பிடித்து இழுத்ததாகவும, அப்போது, . அடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்து கிளம்பிய ராஜாவின் வாகனத்தை எட்டி உதைத்ததில்தான் வண்டியில் இருந்து விழுந்த உஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அந்த பகுதியில் திரண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தின் போது சிலர் அந்த பகுதியில் வந்த பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வந்து சமாதானப்படுத்தினார். அதைத்தொடர்ந்தும் கூட்டம் கலையாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, காவல் ஆய்வாளர் காமராஜ்மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடியபோது, மறியலில் ஈடுபட்டவர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.