சென்னை:
வேலூர் அருகே பெரியார் சிலை நேற்று பாஜகவினரால் உடைக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக சிலையை உடைத்தவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் கைதான பாஜக திருப்பத்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துராமன், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை பாஜக நகர செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்ஸின் ஆகிய இருவர் சேதப்படுத்தினர். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் கட்டிவைத்து உதைத்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
முத்துராமனுடன் கைது செய்யப்பட்ட பிரான்ஸின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைத்த நிலையில், அம்மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலை மார்ச் 5ம் தேதி தகர்க்கப்பட்டது. இதனை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த பாஜக தேசிய செயலாளர் ராஜா, இதேபோல், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் தகர்க்கப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இணைய தளத்தில்ரா எச். ஜாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜகவும் கண்டனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து ராஜா வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மத்திய அரசும் சிலைகளில் விஷயத்தில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசம் வலியுறுத்தி உள்ளது.