
சென்னை:
பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளராக இருப்பவர் ஜெயராமன். இவர் நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சமூகவலைதளமான பேஸ்புக்கில் கீற்று நந்தன் என்கிற ரமேஷ் என்பவர், பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel