டில்லி:
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷை கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இதனால் ஆம் ஆத்மி அரசுக்கு கீழ் பணியாற்ற முடியாது என்று அரசு அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநில அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம், அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றை நேரடி ஒளிபரப்பு செய்ய டில்லி அசு முடிவு செய்துள்ளது. இதன் ஆடியோ பதிவு, கோப்புகள் நகர்வு குறித்த தகவல்கள் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் வெளியிடும் திட்டம் அமல்படுத்தப்டவுள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்பு செய்வது போல் இதுவும் செய்யப்படவுள்ளது. வெளிப்படையான நிர்வாகத்திற்கு இது முக்கிய நகர்வாக இருக்கும் என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனாக கலந்துரையாடல் கூட்டங்கள் நாடாளுமன்றம் போல் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 24ம் தேதி கைலாஷ் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.