ந்தியப் பிரதமர் மோடியை மிகச் சிறந்த மனிதர் என்று புகழ்ந்து பேசிய  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  மோடி பேசுவது போலபேசி மிமிக்ரி செய்து காட்டினார்.

ஏற்கனவே மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நடைபெற்ற அதிகாரிகளுடனான  ஆலோசனை கூட்டங்களில், நரேந்திர மோடி பேசியது போல அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் மிமிக்ரி செய்து பேசியுள்ள நிலையில் தற்போது மீண்டும் மோடியைப் போல  மிமிக்ரி செய்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லே-டேவிட்சன் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியா 100 சதவிகிதம் வரி விதிக்கிறது. ஆனால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் இரு சக்கர வாகங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.

இந்தியாவின் இந்த இரட்டை நிலை குறித்தர், சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஆளுநர்கள் மாநாட்டில் பேசும்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மோடி  மிகவும் சிறந்த மனிதர் என்று நான் கருதுகிறேன்… ஆனால், அவர் என்னிடம்  அமெரிக்க இரு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரியை குறைப்பதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அவர் சொன்னதை செய்யவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.

அப்போது டிரம்ப்,  பிரதமர் மோடி கூறுவது போல தனது கையை பிடித்துக் கொண்டு, மிகவும் தாழ்ந்த, பணிவான குரலில் பேசினார். அதற்கு நான் யா யா என்று கூறினேன். வேறு என்ன சொல்ல? என்று மோடி பேசுவதுபோல மிமிக்ரி செய்து காட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.