
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பேனர்கள் கிழிக்கப்பட்டிருப்பது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. ஆளும் அதிமுக சார்பில் தனியாகவும், தினகரன் அணி சார்பில் தனியாகவும் தமிழகம் முழுதும் இந்நிகழ்வு நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தேனியிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட இரு தரப்பினரும் பெரிய பெரிய பேனர்களை நகர் முழுதும் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், தேனியில் பெரியகுளம் சாலையில் வைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரின் பேனர்களும் நேற்று இரவு கிழிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து இரு தரப்பினரும் பரஸ்பரம் மற்றவர் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனால் தேனி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]