மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முறைகேட்டில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் தலையங்கம் வெளியிடப்பட் டுள்ளது. அதில், ‘‘ஊழல் ஒழிக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் உத்தரவாதம் சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. நிரவ் மோடி ஜனவரியில் வெளிநாடு தப்பிச் சென்றது தற்போது வெளிச்சத்துக்கு வ ந்துள்ளது.

ஆனால் சில வாரங்களுக்கு டாவோசில் பிரதமர் மோடியுடன் அவர் இருந்துள்ளார். பாஜக.வின் பங்குதாரராக நிரவ் மோடி இருந்துள்ளார். பாஜக.வுக்கு தேர்தல் நிதி திரட்டுவதில் நிரவ் மோடி பெரும் உதவி செய்துள்ளார். பாஜக தலைவர்கள் ஆசியுடன் நிரவ்மோடி நாட்டை கொள்ளையடித்துள்ளார். பாஜக அதிக சொத்து குவிக்கவும், பல தேர்தல்களில் வெற்றி பெறவும் பல நிரவ் மோடிகள் உதவி செய்து வருகின்றனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த தலையங்கத்தில், ‘‘நிரவ் மோடி மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் டாவோசில் அவர் மற்ற தொழிலதிபர்களுடன் பிரதமரை எப்படி சந்திக்க முடிந்தது. அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய பின்னர் அவரது சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

லாலு பிரசாத் யாதவ், சக்கான் புஜ்பால் போன்ற அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிறையில் அடை க்கப்படும் நிலையில், விஜய் மல்லையா மற்றும நிரவ் மோடி போன்றவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வது எப்படி என்று தெரியவில்லை. 100 மற்றும் 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆனால், சிலர் பல கோடி ரூபாய்களுடன் தலைமறைவாகிவிடுகின்றனர். மத்திய பாஜக அரசு விளம்பரங்கள் மூலம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விளம்பர பிரச்சாரங்களகுகு ஆயிரகணக்கான கோடி ரூபாய்கள் செலவிடப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.