இஸ்லாமாபாத்:

ஹஜ் பயணிகளுக்கு உதவும் பாகிஸ்தான் தன்னார்வலர்கள் பட்டியலில் திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் மாணவர் அமைப்பான ஸ்கவுட் மூலம் ஆண்டுதோறும் ஹஜ் பயணிகளுக்கு உதவ தன்னார்வலர்கள் சவுதிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இந்த வகையில்  இந்த ஆண்டு திருநங்கைகளும் சவுதிக்கு செல்கின்றனர். இவர்களுடன் 150க்கும் மேற்பட்ட ஸ்கவுட் மாணவர்களும் செல்கின்றனர்.

இது குறித்து சிந்து மாகாண ஸ்கவுட் கமிஷனர் அதீஃப் அமின் ஹூசைன் கூறுகையில், ‘‘ திருநங்கைகளை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் இதர 3 மாகாணங்களில் இருந்து தலா 2 அல்லது 3 திருநங்கைகள் இந்த குழுவில் சேர்க்கப்படுவார்கள். சமீபத்தில் திருநங்கைகளில் இளைஞர்கள் 40 பேர் சிந்த் மாகாணத்தில் ஸ்கவுட் மாணவர் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

பாகிஸ்தானின் தேசிய ஸ்கவுட் அமைப்பு மிகப்பெரிய தன்னார்வலர் அமைப்பாகும். தன்னார்வலர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் தேர்வு நடத்தி ஹஜ் பயணிகளுக்கு உதவும் குழு அமைக்கப்படும்.

இதன் பின்னர் ஸ்கவுட் சங்கம் இறுதி பட்டியலை தயாரித்து மத விவகாரத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும். இந்த ஆண்டு இந்த பட்டியலில் திருநங்ககைளும் இடம்பெற்றுள்ளனர். ஸ்கவுட் சங்கத்தில் திருநங்கைகள் இணைந்ததன் மூலம் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்துள்ளதோடு, நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.