டெக்ரான்

ரானிய பயணிகள் விமானம் 60 பயணிகளுடன் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது

ஈரான் தலைநகரான டெக்ரானில் இருந்து இஸ்பகான் மாகாணத்தில் உள்ள யசூஜ் பகுதியை நோக்கி ஒரு பயணிகள் விமானம் சென்றுக் கொண்டிருந்தது.   அதில் சுமார் 60 பயணிகளும் விமான ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவும் பயணம் செய்துக் கொண்டுள்ளனர்.

அந்த விமானம் ஈரான் நாட்டின் ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள செமிரோம் என்னும் இடத்தில் மலைகளில் மோதி விபத்துக்குள்ளாகியது.   உடனடியாக அந்தப் பகுதிக்கு மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்ட எலிகாப்டர் விமானம் மோசமான வானிலையால் அப்பகுதிக்கு செல்ல முடியாமல் திரும்பி வந்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்தவர்கள் கதி என்ன ஆயிற்று என்பது இன்னும் அறியப்படவில்லை.    காலையில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அனைத்து அவசர கால மீட்புக்  குழுவும் தயாராக உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.   அதே நேரத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடம் மலைப்பாங்கானது என்பதால் ஆம்புலன்சு வாகனங்களை அனுப்ப இயலாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.