நாவலூர்:

சோழிங்கநல்லூர்  அருகே ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த  பெண் என்ஜினீயரை தாக்கிய வழி பறி செய்த விவரகாரத்தில்  3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12-ந் தேதி இரவு லாவண்யா என்ற இளம்பெண் பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம் பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு வந்துகொண்டிருந்தார். அப்போது, அவரை தொடர்ந்து வந்த கொள்ளை யர்கள், லாவண்யா தலையில் இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் ஓட்டி வந்த மொபட்டையும் பறித்துச் சென்றனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தலையில் தாக்கப்பட்டதால், லாவண்யா கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த விசாரணையில், .இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில், லாவண்யா, ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் என்பதும், சென்னை நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

இந்நிலையில் லாவண்யாவுக்கு நேற்று முன்தினம் சுயநினைவு திரும்பியது. அதையடுத்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் கொள்ளையர்களை பிடிக்க வலை வீசினர். அப்போது, கொள்ளை யர்கள் பறித்துச் சென்ற மொபட்  செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே கிடந்தது.

அதை மீட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்கள் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, விநாயக மூர்த்தி என்பது தெரிய வந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.