டில்லி:

நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வங்கி கணக்கிலிருந்த ரூ. 3.9 கோடியும் முடக்கப்பட்டுள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புள்ள வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.5,100 கோடி மதிப்பு தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிரவ் மோடி வங்கி கணக்கில் உள்ள ரூ. 3.9 கோடி முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவுத்துறைக்கு அமலாக்கத்துறை பரிந்துரை செய்துள்ளது.