சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க 28 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க அம்மாநில பள்ளிக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான கேமராக்களை வாடகை அடிப்படையில் பொறுத்த முடிவு செய்யப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 

தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. முன்னதாக முறைகேடும் அதிகம் நடக்க வாய்ப்புள்ள சில குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டும் கேமரா பொறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து மையங்களிலும் பொறுத்தப்படுகிறது.

மாநிலத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 800 தேர்வு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தலா 10 அறைகள் உள்ளன. அனைத்து அறைகளிலும் பொறுத்த வேண்டும் என்றால் 28 ஆயிரம் கேமராக்கள் தேவைப்பட்டது. அதனால் வாடகை அடிப்படையில் பொறுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

உ.பி.யில் அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டது. இதை ஏன் பஞ்சாப்பில் அமல்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் தோன்றியது தான் இந்த திட்டம். கேமராக்கள் பொறுத்துவதால் அரசுக்கு கூடுதலாக ரூ. 6 கோடி செலவாகிறது. அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று பஞ்சாப் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளது.