சஹாரன்பூர்:
இஸ்லாமியர்கள் ஆயுள் மற்றும் சொத்து காப்பீடு செய்வதற்கு, உ.பி.யைச் சேர்ந்த தாருல் உலமா தேவ்பந்த் அமைப்பு, ‘பத்வா’ எனும் தடை விதித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் இயங்கி வருகிறது தாருல் உலமா தேவ்பந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு. இந்த அமைப்பு இந்தாண்டு துவக்கத்தில், இஸ்லாமிய பெண்கள், டிசைன்கள் உள்ள மற்றும் இறுக்கமான பர்தா அணிவதற்கும், கால்பந்து போட்டியை பார்ப்பதற்கும், தடை விதித்தது.
இந்த நிலையில், இஸ்லாமிய மக்கள், தங்கள் ஆயுள் மற்றும் சொத்துகளுக்கு காப்பீடு செய்வதற்கும், தடை விதித்துள்ளது. இது குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்த, உலமா மவுலானா நாசிப் அஹமது மற்றும் மதரசா தலைவர், தாருல் நிஸ்வா ஆகியோர் கூறியதாவது:
“காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் லாபத்துக்காக காப்பீடு செய்ய வற்புறுத்துகின்றன. அப்படி செய்யப்படும் காப்பீட்டின் மீதான வட்டியை, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.
காப்பீட்டின் மூலம் கிடைக்கும் தொகை வட்டிக்கு சமமானது. வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டும் இஸ்லா மியத்துக்கு எதிரானது. ஆகவே, இஸ்லாமிய மக்கள் காப்பீடு செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.