மாலே:
மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலையை பிரகடனம் செய்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத், மேலும் சில முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் (ஏஃஎப்பி) செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய 2 இந்திய செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பிரிட்டன் வாழ் இந்தியர் என்பது தெரியவந்தள்ளது.