டில்லி:
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக மூன்று நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
இன்று டில்லியில் இருந்து புறப்படும் பிரதமர், முதலில் பாலஸ்தீனம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாலஸ்தீனத்திலுள்ள ஜோர்டான் செல்லும் பிரதமர் தலைநகர் அம்மானில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பாலஸ்தீனத்தின் ரமல்லாஹ் மற்றும் மேற்குகரை ஆகிய பகுதிகளுக்கு மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த பயணத்தின் போது பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து பேச இருப்பதாகவும் அரசு அறிவித்து உள்ளது.
அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் மோடியுடன் உயர்அதிகாரிகளும் செல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து பிப். 10-ந் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.