டில்லி,

ணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையீடு இருக்கக்கூடாது என உச்சநீதி மன்றம் அதிரடியாக கூறி உள்ளது.

நாட்டின் பெரும்பாலான விவாகரத்துக்கள் கட்ட பஞ்சாயத்து முறையிலேயே நடைபெறுவதாகவும், வெளிநபர்கள் தலையிட்டு பிரச்சினையை  தவறான வழியில் கொண்டு செல்வதாகவும்,  இதை தடுக்க வேண்டும் என்று கூறி,  சக்திவாகினி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கணவன்-மனைவி பிரச்னையில் மூன்றாவது நபர் தலையிடுவது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது என தெரிவித்தது.  மேலும் பிரச்னை எதுவாயினும் அதை சட்டரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.