சென்னை,
டிடிவி ஆதரவு செந்தில்பாலாஜி, அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கியது தொடர்பான வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு துறை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
செந்தில்பாலாஜி தமிழக போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.95 லட்சம் பணமோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமின் வழங்கி உள்ளது.
இந்நிலையில், பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
விசாரணையின்போது, அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.