ண்டா,  உத்திரப் பிரதேசம்

ஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட போலீஸ் தங்களை பிடித்த உயரதிகாரிகளை தாக்கி உள்ளார்.

உத்திரப் பிரதேசம் பாண்டா மாவட்டத்தில் உள்ள கிர்வா காவல் நிலையத்துக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளிச் சென்ற லாரிகளிடம் காவல்துறையினர் பணம் வசூலிப்பதாக புகார் வந்தது.   அதையொட்டி  மூத்த காவல்துறை அதிகாரிகள் ஹிமன்ஷு குமார் மற்றும் மோகித் குப்தா இருவரும் அந்த காவல்நிலையத்துக்கு திடீரென சோதனைக்கு சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில்  சட்டவிரோதமாக மணல் அள்ளிச் சென்ற லாரி ஓட்டுநர்களிடம் இருந்து அந்த காவல் நிலையத்தை சேர்ந்தஒரு காவலர் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தார்.    அவரைக் கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்துள்ளனர்.   உடனே அந்த லாரி ஓட்டுனர்களுடன் சேர்ந்துக் கொண்டு லஞ்சம் வாங்கிய காவலர் தாக்கி உள்ளனர்.   இந்த தாக்குதலில் ஹிமன்ஷு குமார் காயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரி ஷாலினி என்பவர், கிர்வா காவல் நிலைய போலிஸ் விவேக் பிரதாப் சிங் உட்பட நால்வர் மீது புகார் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளார்.   மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.