சென்னை:
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் இடத்தில் 10 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை நந்தனத்தில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் விஜயராகவா சாலை, வடக்கு போக்கு, ஜிஎன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. அண்ணாசாலையில் இருந்து நந்தனம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சம்பவ இடத்தை மயிலாப்பூர் தாசில்தார் ஆனந்த மகாராஜன் நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் கூறுகையில், ‘‘ஆய்வுக்கு பிறகே பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியும். அந்த பகுதியில் ஏற்கனவே சுரங்க பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது’’ என்றார்.