திண்டுக்கல்,

தைப்பூசம் திருவிழாவையொட்டி, பழனிக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன. இந்த அறுபடை  வீடுகளில் 3- வது படை வீடாகத் திகழ்வது பழனி. இங்கு முருகன் தண்டாயுதபாணி என்ற பெயரில், ஆண்டிக் கோலத்தில்  காட்சி யளிக்கிறார்.

தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தையொட்டி  ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த தைப்பூச திருவிழாவுக்க  பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து முருகன் கோவிலுக்கு வருவது வழக்கம். லட்சணக்கான பக்தர்கள் நடந்தும், காவடி தூக்கியும் பழனிக்கு வருகை தருவார்கள்.

தைப்பூசம் திருவிழா பழனியில்  10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.