பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உதிரிப்பூக்கள், முள்லும் மலரும், ஜானி, பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய மகேந்திரன், விஜய் நடித்த தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது ’புகழ் என்கிற நான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்ட மகேந்திரன், படப்பிடிப்பின் போதே திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர், புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது