கோயம்புத்தூர்

சாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் 150 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நிவேதிதா ரத யாத்திரை நாளை  கோவையில் தொடங்க உள்ளது

சாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதாவின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஒரு ரத யாத்திரை நடக்க உள்ளது.   இந்த யாத்திரையை ஒட்டி பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.   இதில் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.    பாடல்கள் அடங்கிய குறுந்தகடை இசையமைப்பாளர் பரத்வாஜ் வெளியிட கங்கை அமரன் பெற்றுக் கொண்டார்.    கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனும் விழாவில் கலந்துக் கொண்டார்.

வானதி தனது உரையில், “வெளிநாட்டுப் பெண்ணான சகோதரி நிவேதிதா சாமி விவேகானந்தர் போதனைகளால் இந்தியாவுக்கு வந்து சேவை புரிந்தார்.    அவருடையை சிந்தனைகளை கல்லூரி மாணவிகளிடம் கொண்டு செல்ல நிவேதிதா ரத யாத்திரை என்னும் பெயரில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

நாளை கோவையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனால் தொடங்கி வைக்கப்படும் இந்த 30 நாள் யாத்திரை 27 மாவட்டங்கள் வழியாக 3000 கிமீ தூரம் செல்லும்.   இந்த யாத்திரையில் மொத்தம் 2 லட்சம் கல்லூரி மாணவிகள் பங்கேற்பார்கள்.    சென்னையில் நிறைவு நா விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கலந்துக் கொள்ள உள்ளனர்”  என கூறினார்