டில்லி,

தேசிய பாதுகாப்பு படையின் புதிய தலைவராக சுதீப் லக்தாகியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் எஸ்.பி.சிங் இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேசிய பாதுகாப்பு படை எனப்படும் நேஷனல் செக்யூரிட்டு கார்டு1987ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து உருவாக்கப்பட்டது.

இந்த படையினர் முக்கிய விஐபிக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு,  கடத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளவும் திறமைபெற்றவர்கள்.

தற்போது இந்த படைக்கு தலைவராக  எஸ்.பி.சிங் இருந்து வருகிறார்.இவரது பணிக்காலம் வரும்   31-ம் தேதி முடிவடைகிறது.

அதையடுத்து, புதிய தலைவராக, தற்போதைய மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சிறப்பு இயக்குனராக பணியாற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான  சுதீப் லக்தாகியாவை  பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு நியமனம் செய்துள்ளது.

பிப்ரவரி 1ந்தேதி பதவி ஏற்கும் லக்தாகியா,  அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த பணியில் நீடிப்பார்.