நிக்கோலஸ் சாமுவேல் ககர்

ஜெனிவா,

சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரால் கைவிடப்பட்ட குழந்தை இன்று சுவிட்சர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராகி இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்துள்ளது.

மேலும்,  சுவிஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்னும் பெருமை நிக்கோலஸ் சாமுவேல் ககர் என்பவர்  பெற்றுள்ளார்.

யார் இந்த நிக்கோலஸ் சாமுவேல் ககர்

1970ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் பிறந்தவர் சாமுவேல். இவரது தாய் பெயர் அனுஷியா என்று கூறப்படுகிறது. உடுப்பியில் உள்ள சிஎஸ்ஐ லாம்பெர்ட் மெமோரியல் மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்த அனுஷியா, அழகான அந்த ஆண் குழந்தை தேவையில்லை என்று மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இதன் காரணமாக அனாதையா இருந்த அந்த குழந்தை, 1 1970 ஆண்டு மே மாதம் சுவிஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு தத்து கொடுக்கப்பட்டது.

அவரை தத்தெடுத்த  ப்ரிட்ஸ் மற்றும் எலிசபத் என்ற சுவிஸ் தம்பதியினர், அவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று சில ஆண்டுகாலம் வாழ்ந்தனர். கேரளாவில் எலிசபெத் ஆசிரியையாய பணியாற்றியதாக கூறப்படுகிறது.

4 ஆண்டுகளுக்கு பிறகே சுவிஸ் தம்பதியினர் சாமுவேலுடன்   இந்தியாவை விட்டு சுவிஸ் பறந்தனர். அங்கு அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது 48 வயதாகும் சாமுவேல், தற்போது  சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் சுவிட்சர்லாந்தில் 143 மட்டுமே வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவை  பிறப்பிடமாக  கொண்ட ஒருவர் தற்போது சுவிஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது உலக தமிழர்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.

சாமுவேல் இன்றும் கேரளாவில் உள்ள  தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.