பெங்களூர்:
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தரம்தாழ்ந்து விமர்சிக்கும் பாஜகவினருக்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டன் தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அப்போது அவருடம் இளம் பெண் ஒருவர் செல்பி எடுக்க விரும்பினார். அப்போது, படம் எடுக்க வசதியாக, அப்பெண்ணை தன் அருகே முதல்வர் சித்தராமையா இழுத்து நிற்கவைத்தார்.
இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் உலவ்விட்டார், பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா. பொது இடத்தில் பெண் மீது கை வைப்பதா என்றும் பதிவிட்டிருந்தார்.
இதையே பாஜகவினர் பலரும் பரப்பினார்கள். இதற்கு கட்சி பேதம் கடந்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
“சித்தராமையா கேஷுவலாக அனைவரிடமும் பழக கூடியவர். அவரது பேத்தி வயது பெண்ணை அருகே நிற்க வைக்க உதவியுள்ளார். ஆனால், அதை தப்பான கண்ணோட்டத்தோடு சித்தரித்துள்ளார் பாஜக ஐ.டி. விங் மாளவியா. இது மிகவும் தவறு.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது தேர்தல் நேரம். பாஜக தனது வழக்கமான தரத்தைவிட இப்போது இன்னும் தாழ்ந்து கொள்ளும்” என்று பதிவிட்டுள்ளார்.