டில்லி:
பாகிஸ்தான் பயங்ரவாதி ஹபீஸ் சையத், காஷ்மீ ர்பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சலாலுதீன் உள்பட 12 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.
பிரிவினை வாத அமைப்பினர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் நிதி பெற்று காஷ்மீரில் வன்முறை சம்பவங்களை நடத்தி வருவது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்ஐஇ) விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்கள் சலாலுதீன், பஷீர் அகமதுபட், கம்ரான் யூசுப் ஆகியோர் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத்திடம் நிதி பெற்று காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஹபீஸ் சையத், பிரிவினைவாத தலைவர்கள் உள்பட 12 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 ஆயிரத்து 794 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.