ஊட்டி,

திமுக அம்மா அணி என்ற பெயரிலேயே கட்சி தொடர்ந்து செயல்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, புதிய கட்சி குறித்து இன்று அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித டிடிவி தினகரன்  புதிய கட்சி கிடையாது… அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே தொடர்ந்து இயங்குவோம் என பல்டிஅடித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் கொண்டாடிய டிடிவி தினகரன், நேற்று அங்கிருந்து புறப்படும்போது, புதிய கட்சி குறித்து எம்ஜிஆர் பிறந்தநாளான நாளை (இன்று) கூறுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று ஊட்டிக்கு சென்றுள்ள டிடிவி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…

அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே தொடர்ந்து இயங்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.  இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதால், தற்போதைக்கு புதிய கட்சி தொடங்குவதற்கான திட்டம் ஏதும்  இல்லை என்று கூறினார். ஒரு வேளை நான் வேறு கட்சியை ஆரம்பித்தால் அதன் நோக்கம் அதிமுகவை மீட்டெடுப்பதாகவே அமையும் என்றார்.

நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் தொடர்ந்து இயங்க  நீதி மன்றத்தை அணுக இருப்பதாகவும்,  வர இருக்கும் உள்ளாட்சி மற்றும் பொதுத் தேர்தலில்  மக்கள் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றிபெற்று நாங்கள்தான் உண்மையான கட்சியினர் என நிருபித்து அம்மாவின்வழியில் கட்சியையும் ஆட்சியையும் மீட்டெடுப்போம் என்றார்.

மேலும், ஆர்.கே.நகரில் தான் பெற்ற வெற்றி குறித்து, நாங்கள் அயரந்திருந்த நேரத்தில் வெற்றி பெற்று விட்டனர் என பேசியுள்ளார்.  போர் களத்தில் வீரனுக்கு அயர்ச்சிவருமா அயர்ச்சி வருபவன் வீரனா என கேள்வி எழுப்பிய தினகரன் நாங்களே உண்மையான அஇஅதிமுக என்பதை மக்கள் மன்றத்தில் நிருபிப்போம் என்றார்.

மேலும், புரட்சி தலைவர்,  புரட்சி தலைவி வழியில் இன்றைக்கு தேவையான மக்கள் திட்டங்களை வழங்குவோம் என பேசினார்.

நேற்று புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவதாக செய்தியாளர்களிம் அறிவித்து, அவர்களிடம் பரபரப்பை உருவாக்கி விட்டு, இன்று  அப்படி ஒரு எண்ணமே கிடையாது என்று பல்டியடித்து பேசியிருப்பது செய்தியாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே  ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்த  டிடிவி தினகரன் தான் எம்.பி. பென்சனில் வாழ்த்து வருவதாக கூறியிருந்தார்.

ஆனால், அதைத்தொடர்ந்து இரண்டு நாளில்  சசிகலா, டிடிவி தினகரன் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றபோது,   அரசியல்வாதினா கோமனத்தோட அலையனுமா..? சொத்து இருக்கக்கூடாது என்று மாற்றி பேசினார்.

இது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையே அவரின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தற்போதும் அதுபோலவே புதிய கட்சி குறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.