டில்லி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றம் சுமத்தி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய நான்கு நீதிபதிகளும் இன்று பணிகளை தொடங்கி உள்ளனர்
கடந்த 12ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசெப் ஆகியோர் வரலாற்றில் முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும், உச்சநீதிமன்ற நிர்வாகம் மீதும் குற்றம் சாட்டினர். இந்த நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த பார் கவுன்சில் 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.
இன்று உச்ச நீதிமன்றஹ்த்டில் லுத்ரா என்னும் வழக்கறிஞர் இது குறித்து, “இந்தச் செயல் உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் சதியாகும். இது குறித்து சடவடிக்கை எடுக்க வேண்டும்” என தலைமை நீதிபதியிடம் கோரினார். ஆனால் தீபக் மிஸ்ரா ஏதும் கூறவில்லை. மேலும் இதுவரை இது குறித்து தீபக் மிஸ்ராவும், அதிருப்தி நீதிபதிகளும் சந்தித்து பேசவில்லை.
இன்று தீபக் மிஸ்ரா மீது குற்றம் சாட்டிய நான்கு நீதிபதிகளும் தங்களது வழக்கமான பணிகளை துவங்கி உள்ளனர்.