ஸ்ரீநகர்:
ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபடும் முயற்சியில், அந்த பகுதியில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து துலஜ்னா, உரி பகுதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது உரி பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.
இதையடுத்து பதில் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினரின் அதிரடியில் 6 பயங்கரவாதி கள் சுடப்பட்டு உயிரிழந்தனர். மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.